முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடத்தப்பட்ட ஆஸி. வீரர்

புதன்கிழமை, 5 மே 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

ஆஸி. முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் மேக்கில், நான்கு நபர்களால் கடந்த மாதம் கடத்தப்பட்டார். 50 வயது மேக்கில் ஆஸ்திரேலிய அணிக்காக 44 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14 இரவு 8 மணிக்கு சிட்னியில் உள்ள லோயர் நார்த் ஷோர் பகுதியில் நான்கு நபர்கள், மேக்கில்லை காரில் கடத்திச் சென்றார்கள். ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்று துப்பாக்கி முனையில் அவரை மிரட்டினார்கள். 

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மேக்கில்லை விடுவித்துவிட்டார்கள். இதையடுத்து காவல்துறையினரிடம் இச்சம்பவம் பற்றி புகார் அளித்தார் மேக்கில், தற்போது இச்சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை நியூ சவுத்வேல்ஸ் காவல்துறை கைது செய்துள்ளது. மேக்கில்லின் காதலியின் சகோதரரையும் இச்சம்பவம் தொடர்பாக கைது செய்துள்ளார்கள். 

__________

வார்னருக்கு மகள் வேண்டுகோள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கையை மீறிக்கொண்டிருக்கும் நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டன. இதனையடுத்து சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஆடும் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் மகள் இவி மே, ‘உடனே கிளம்பி வீட்டுக்கு வாருங்கள் அப்பா’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐ.பி.எல் 2021 தொடரில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பல ஆண்டுகள் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர், அண்மையில் தலைமைப் பயிற்சியாளர் டாம் மூடியுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

__________

தமிழக வீரருக்கு வரவேற்பு

நேபாள தேசிய விளையாட்டு அமைப்பு சார்பில்  அந்நாட்டில் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சர்வதேச ஊரக இளைஞர்களுக்கான தடகளப்போட்டிகள் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றன.  இதில் திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தை அடுத்துள்ள எலமனூரைச் சேர்ந்த அண்ணாதுரை – கமலாநேரு தம்பதியினரின் மகன் அன்புதுரை பங்கேற்றார். பல நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றபோதிலும்  தனது திறமையினால் மற்ற வீரர்களை வீழ்த்தி புள்ளிகளின் அடிப்படையில் தங்கப்பதக்கம் வென்ற அன்புதுரை, தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தந்தையை இழந்து, தாயார் தற்காலிக ஆசிரியராக தனியார் பள்ளியில் பணியாற்றிவரும்நிலையில் டேக்வாண்டா விளையாட்டின் மேல் கொண்ட ஆர்வத்தால் தீவிர பயிற்சி மேற்கொண்டு சாதித்துள்ளார் அன்புதுரை.  தனது மகன் செய்துள்ள இந்த சாதனை இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உள்ளதாக அவரது தாய் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். தங்கம் வென்ற அன்புதுரை சேலத்தில் இருந்து திருச்சி மாவட்டம் எலமனூர் வந்தபோது,  உறவினர்கள், கிராம மக்கள் ஆகியோர் அவருக்கு உற்சாக வரவேற்பு  அளித்தனர்.  வெடி வெடித்தும், கேக் வெட்டியும் சால்வை அணிவித்தும் மலர் கொடுத்தும் அன்புதுரையை வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து