முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா

புதன்கிழமை, 19 மே 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : நடிகை நயன்தாரா கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக வெளியான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாகப் பரவி வருவதையடுத்து, அதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில்  அரசியல் தலைவர்கள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என பிரபலமானவர்கள் தடுப்பூசி போட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா, நேற்று முன்தினம் தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்தப் புகைப்படத்தில், நடிகை நயன்தாராவுக்கு தடுப்பூசி செலுத்திய செவிலியரின் கையில் தடுப்பூசியே இல்லை, வெறும் விரல்களால் மட்டுமே அவர் தடுப்பூசி போடுகிறார், அப்போது நயன்தாரா தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்று போஸ் மட்டுமே கொடுத்துள்ளார் என்று சர்ச்சை எழுந்துள்ளது.

நயன்தாராவின் இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்த நெட்டிசன்கள் பலரும் ‘‘ஊசி எங்கே?’’ என கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பான மீம்ஸ்களும் வெளியாகின்றன.  இந்த சர்ச்சைகளுக்கு நடிகை நயன்தாரா என்ன செய்வார் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து