முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு: நாராயணசாமி கடும் கண்டனம்

புதன்கிழமை, 9 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுச்சேரி : நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் புதுச்சேரி முதல்வர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை எனப் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது,

‘‘புதுச்சேரியில் கொரோனா தாக்கம் குறைந்திருக்கும் காரணத்தினால் மதுக்கடைகள் உட்பட அனைத்துக் கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், அண்டை மாநிலமான தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

இதன் தாக்கம் புதுச்சேரியில் உள்ளது. மாநில எல்லையில் உள்ள மதுக்கடைகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு செல்கின்றனர். இதனால் கொரோனா 2-வது அலை மறுபடியும் தாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அரசு புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் விஷப்பரீட்சையை இந்த அரசு செய்யக் கூடாது. மதுக்கடைகளைத் திறந்ததன் மூலமாக கொரோனா அதிகமாக வந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் முதல்வர் ரங்கசாமி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். வாழ்வாதாரம் இல்லை. வேலையில்லை. இந்த நேரத்தில் மக்களுக்குக் கொடுக்க வேண்டிய நிவாரணத்தை அரசால் கொடுக்க முடியவில்லை. இதைத் தர நிதியில்லை என்கிறார்கள். ஏற்கெனவே நிர்வாகத்தைப் பார்த்த முதல்வர், நிதியில்லாமல் எப்படி நிவாரணத்தை அறிவித்தார்?

புதுச்சேரியில் அரசியல் துரோகிகள் நிறைய பேர் வெற்றி பெற்று வந்துள்ளார்கள். இதில் சில அரசியல் கோமாளிகளும் வந்துள்ளார்கள். இவர்களை எல்லாம் எங்களது ஆட்சியில் கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் அவர்கள், மக்கள் கள்ளச்சாராயத்தைக் குடித்து இறக்கிறார்கள் என்று ஆளுநரைச் சந்தித்து மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் எனக் கூறுகிறார்கள். அவர்களுக்கு கரோனாவால் ஒரு மாதத்தில் 750 பேர் இறந்தது கண்ணுக்குத் தெரியவில்லை. இந்த அரசியல் கோமாளிகளை கட்டுக்குள் வைத்திருக்க அரசால் முடியவில்லை.

பிரதமர் மோடி எடுத்த முடிவின் அடிப்படையில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால், நீட் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இது எந்த வகையில் நியாயம். தமிழக முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் என்ன செய்கிறார் என்று தெரியவில்லை. எனவே, மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பிரதமருக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கும் நான் கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு நாராயணசாமி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து