முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் 72 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா தொற்று 70,421 ஆக சரிந்தது

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் 7-வது நாளாக நேற்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.  

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று  வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கடந்த 72 நாட்களில் இல்லாத குறைந்த அளவாக புதிதாக 70 ஆயிரத்து 421 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 10 ஆயிரத்து 410 ஆக உயர்வடைந்து உள்ளது.  கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 3,921 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,74,305 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 501 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 81 லட்சத்து 62 ஆயிரத்து 947 ஆக உயர்வடைந்து உள்ளது.  கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 9,73,158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 25 கோடியே 48 லட்சத்து 49 ஆயிரத்து 301 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து