முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கி கார் மாயம்

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

மும்பை : மும்பையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்து, சில நிமிடங்களிலேயே கார் ஒன்று தண்ணீருக்குள் மூழ்கி மறைந்து விட்டது.

மராட்டிய மாநிலத்தில் கடந்த வாரம் முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன.  மும்பை மற்றும் கொங்கன் பகுதியில் கடந்த புதன்கிழமை பருவமழை தொடங்கியது. முதல் நாள் கொட்டி தீர்த்த மழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியது. 

இந்த நிலையில் நகரில் 4-வது நாளாக நேற்று முன்தினமும் பலத்த மழை பெய்தது. காலை முதலே மழை இடைவிடாமல் வெளுத்து கட்டியது. இதன்காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.  தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துகொண்டது. சாலைகளிலும் தண்டவாளங்களிலும் வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மும்பையின் காட்கோபர் பகுதியில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, அங்கே திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் விழுந்து, சில நிமிடங்களிலேயே தண்ணீருக்குள் மூழ்கி மறைந்து விட்டது. இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

சிறு பள்ளமாகத் தோன்றினாலும், ஒரு காரே மூழ்கி, சிறிது நிமிடத்தில் அந்த பள்ளத்துக்குள் ஒரு கார் இருப்பதே தெரியாத வகையில் முற்றிலும் மறைந்தே போனது இந்த வீடியோவில் படமாக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து