முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவேந்து அதிகாரி வெற்றிக்கு எதிராக மம்தா தாக்கல் செய்த மனு மீது 24-ம் தேதி விசாரணை

வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : சுவேந்து அதிகாரி வெற்றிக்கு எதிராக மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் 24-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு, கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. கடந்த மே மாதம் 2-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 210-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது.

சட்டசபை தேர்தலில், முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, புர்பா மெட்னிபுர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார்.  குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றார். 

இந்நிலையில், நந்திகிராம் சட்டசபை  தொகுதியில், பா.ஜ.க.,வின் சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து,  மம்தா பானர்ஜி கொல்கத்தா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு  நேற்று  காலை நீதிபதி கவுசிக் சந்தா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது மம்தா பானர்ஜி தரப்பு வழக்கறிஞர், மனு மீதான விசாரணையை ஒருவாரம் தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிபதி,  இந்த மனு அடுத்த வாரம் வியாழக்கிழமைக்கு  பட்டியலிடப்படும். அதே வேளையில், மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு இணங்கி  இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என்பதை நீதிமன்ற பதிவாளர் உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்வார் என்றார்.  இதன்படி, இந்த மனு மீதான விசாரணை வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து