முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் காலமானார்: ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

சனிக்கிழமை, 19 ஜூன் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சண்டிகர் : முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர் மோடிஉள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா தொற்றால் மொகாலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருந்ததால் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த மாத தொடக்கத்தில் மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஐ.சி.யூ.வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மில்கா சிங் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விளையாட்டு ஐகான் மில்கா சிங் மறைந்தார் என்ற செய்தி  வருத்தம் அடைய செய்தது. அவரது போராட்டங்களின் கதை மற்றும் விளையாட்டில் அவரது பாத்திரத்தின் வலிமை தொடர்ந்து தலைமுறை இந்தியர்களுக்கு ஊக்கமளிக்கும்.  அவரை இழந்து வாடும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் எண்ணற்ற அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேசத்தின் கற்பனையை கைப்பற்றிய மற்றும் இந்தியர்களின் இதயங்களில் சிறப்பு இடத்தைப் பெற்ற ஒரு மகத்தான விளையாட்டு வீரரை நாங்கள் இழந்து விட்டோம்.  விளையாட்டில் அவரது எழுச்சியூட்டும் ஆளுமை மில்லியன் கணக்கானவர்களுக்கு தன்னையும் நேசிக்க வைத்தது என கூறியுள்ளார். 

 

 இதே போல் மத்திய அமைச்சர் அமித்ஷா, கிரண் ரிஜ்ஜூ, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து