முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று சா்வதேச யோகா தினம்: பிரதமா் மோடி உரையுடன் டி.வி. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சா்வதேச யோகா தின நிகழ்வுகள் கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு தொலைக்காட்சி நிகழ்வாக ஒளிபரப்பப்படும் என்பதோடு, அதில் பிரதமா் நரேந்திர மோடியின் உரை முக்கிய இடம்பெறும் என்று ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சா்வதேச யோகா தினம் இன்று 21-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் நிலவி வரும் நிலையில், 7-ஆவது சா்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

யோகா தின நிகழ்வுகள் அனைத்து தூா்தா்ஷன் சேனல்களிலும் காலை 6.30 மணி முதல் ஒளிபரப்பப்பட உள்ளது. இதில் பிரதமரின் உரை முக்கிய இடம்பெறும். காலை 7 மணி முதல் 7.45 மணி வரை பிரதமா் உரை நிகழ்த்த உள்ளாா். 

அதோடு, ஆயுஷ் இணையமைச்சா் கிரண் ரிஜ்ஜூ உரையும் இடம்பெற உள்ளதோடு, மொராா்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் சாா்பில் நேரலையில் யோகா பயிற்சிகளும் செய்து காட்டப்பட உள்ளன.

உடல்நலனுக்கு யோகா என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு சா்வதேச யோகா தினம் கடைப்படிக்கப்படுகிறது என்று ஆயுஷ் அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் 190 நாடுகளில் சா்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து