முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபா அமெரிக்கா' கால்பந்து: 28 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டீனா சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

பிரேசிலியா: இறுதி ஆட்டத்தில் பிரேசிலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டீனா 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோபா அமெரிக்கா கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றி மூலம் மெஸ்யின் கனவும் நனவாகியுள்ளது. அணி கேப்டனாக இருந்து அவர் பெற்றுத் தரும் முதல் கோபா கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேசில் ஆதிக்கம்...

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. பிரேசிலிலுள்ள மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பிரேசில் ஆக்ரோஷம் காட்டி வந்தது. எனினும், 22-வது நிமிடத்தில் அர்ஜென்டீனா வீரர் ரோட்ரிகோ டி பால் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார்.

அர்ஜென்டீனா...

முதல் பாதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் விழாததால் அர்ஜென்டீனா 1-0 என முன்னிலை வகித்தது. 2-வது பாதி ஆட்டத்தில் பிரேசில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் முதல் கோலுக்கு கடுமையாக முயற்சித்தார்.

கூடுதல் நேரம்...

எனினும், அர்ஜென்டீனா சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பிரேசில் அணியால் கூடுதல் நேரத்திலும் கோல் அடித்து சமன் செய்ய முடியவில்லை. இதன்மூலம், அர்ஜென்டீனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.

15-வது முறை... 

கோபா அமெரிக்கா கோப்பையை அர்ஜென்டீனா வெல்வது இது 15-வது முறை. அர்ஜென்டீனாவுக்கு லயோனல் மெஸ்ஸி பெற்று தரும் முதல் பெரிய சர்வதேச கோப்பை இது.

BOX - 1

தங்க காலணி விருது

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த லயோனல் மெஸ்ஸிக்கு தங்க காலணி விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்டதில் மெஸ்ஸி எந்த கோலும் போடவில்லை. இருப்பினும் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய மெஸ்ஸி அடித்த கோல்களின் மொத்த எண்ணிக்கை 4. இதற்காக அவருக்கு தங்க காலணி விருது வழங்கப்பட்டிருக்கிறது.

0000000000

BOX - 2

மரடோனாவுக்கு அர்ப்பணிப்பு

கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா வீரர்கள் இந்த வெற்றியை மறைந்த மரடோனாவுக்கு அர்ப்பணித்துள்ளனர். கால்பந்தின் ஜாம்பவான் மரடோனா. அவரது தலைமையில் அர்ஜென் டினா 1986-ல் உலக கோப்பையை கைப்பற்றியது. 

மரடோனா வழியில் தான் மெஸ்சி உலகின் சிறந்த கால் பந்து வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்த நிலையில் கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா வீரர்கள் இந்த வெற்றியை மறைந்த மரடோனாவுக்கு அர்ப்பணித்துள்ளனர்.

00000000

BOX - 3

நெய்மர் கண்ணீர்

கடைசி விசில் அடிக்கப்பட்டவுடன் மைதான ஸ்க்ரீன் அர்ஜெண்டீனா சாம்பியன், லியோனல் மெஸ்ஸி சாம்பியன் என்று ஒளிர்ந்தது. நெய்மாரினால் கண்ணீரை அடக்க முடியவில்லை மண்டியிட்டு கண்ணீர் விட்டுக் கதறியது ட்ரெண்டிங் ஆகியுள்ளது.

இந்த வெற்றி அர்ஜெண்டீனாவின் 15வது கோப்பா அமெரிக்கா சாம்பியன் பட்டமாகும். உருகுவேயுடன் சமன் செய்துள்ளது. இந்த வெற்றியுடன் 20 போட்டிகளில் தோற்காமல் ஒரு தொடர்ச்சியை அர்ஜெண்டீனா கடைப்பிடித்து வருகிறது. 2018 உலகக்கோப்பையில் பெல்ஜியமிடம் தோற்று பிரேசில் வெளியேறிய பிறகு ஒரு மேஜர் தோல்வியை அர்ஜெண்டீனா பிரேசிலுக்கு பரிசாக அளித்துள்ளது.

0000000000

BOX - 4

மெஸ்ஸி ஆறுதல் 

நெய்மருக்கு மெஸ்ஸி ஆறுதல் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேசில்  கேப்டன் நெய்மார் மைதானத்தில் குலுங்கிக் குலுங்கி அழுதார். நடுவர் இறுதிவிசில் அடித்ததும் மைதானத்தில் அர்ஜெண்டீனா வீரர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்திருந்தனர்.

 

பிரேசில் வீரர் நெய்மர் , மெஸ்ஸியை நோக்கி வந்தார். மெஸ்ஸி, நெய்மரை ஆரத்தழுவி அவருக்கு ஆறுதல் சொன்னார். அதேநேரத்தில் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருந்த தனது அணி வீரர்களில் முதுகில் தட்டிக்கொடுத்த மெஸ்ஸி. நெய்மரை ஆரத்தழுவி ஆறுதல் கூறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 weeks 20 hours ago இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 20 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 months 3 weeks ago
வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 months 3 weeks ago ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 2 months 3 weeks ago தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து