கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு 21 ஆக உயர்வு: சுகாதார அமைச்சர் உறுதி

Veena-George 2021 07 13 0

Source: provided

திருவனந்தபுரம்: கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வடைந்து உள்ளது என சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட எல்லையை ஒட்டியுள்ள கேரளாவின் பாடசாலை பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கர்ப்பிணி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து அடுத்த நாள் மேலும் 14 பேருக்கு ஜிகா பாதிப்பு உறுதியானது.  இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. திருவனந்தபுரத்தில் புதிதாக கண்டறியப்பட்ட 15 பேரில் பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் என கூறப்படுகிறது. ஜிகா வைரசால் பாதிக்கப்பட்ட 15 பேரும் திருவனந்தபுரம் மாவட்டத்தினர் என கூறப்படுகிறது. இந்த ஜிகா வைரசானது 3 முதல் 14 நாட்கள் வரை உடலில் இருக்கும். இதுவரை ஜிகா வைரசுக்கு எந்த தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 19 ஆக உயர்ந்து இருந்தது.  இந்த நிலையில், கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்வடைந்து உள்ளது என சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, 

கேரளாவில் கூடுதலாக 2 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.  அவர்களில் ஒருவர் 35 வயதுடைய பூந்துறை பகுதியை சேர்ந்தவர்.  மற்றொருவர் 41 வயதுடைய சாஸ்தமங்களம் பகுதியை சேர்ந்தவர் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து