முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட 10-வது பி-8-ஐ ரக போர் விமானம் இந்தியா வருகை

புதன்கிழமை, 14 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கவல்ல 10-வது பி-8ஐ போர் விமானம் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்தது.

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து 8 பி-8ஐ போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு கடந்த 2009-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. முதல் பி-8ஐ போர் விமானம் கடந்த 2013-ம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. சுமார் 30 ஆயிரம் மணி நேரத்திற்கு மேலாக அந்தப் போர் விமானங்கள் பறந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தப் போர் விமானங்கள் நீா்மூழ்கிக் கப்பலைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும். இந்திய கடற்பகுதியை கண்காணிப்பதில் பி-8ஐ விமானங்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

அதையடுத்து, கூடுதலாக 4 போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 9-வது பி-8ஐ போர் விமானம் கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவுக்கு வந்தது. தற்போது 10-வது போர் விமானம் வந்தடைந்துள்ளது.  இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2016-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2-வது போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், பேரிடா் மீட்புப் பணிகளிலும் பி-8-ஐ போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. போர் விமானங்களை இயக்குவதில் இந்திய கடற்படையினருக்கு போயிங் நிறுவனமே பயிற்சி அளித்து வருகிறது. அந்தப் போர் விமானங்களுக்குத் தேவையான உபகரணங்கள், பராமரிப்பு சேவைகள் உள்ளிட்டவற்றையும் அந்நிறுவனமே வழங்கி வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து