எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காபூல்: ஆப்கானிஸ்தானில் அதிபர் மாளிகையில் பக்ரீத் தொழுகையின் போது ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் பக்ரீத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனியுடன் நூற்றுக்கணக்கானோர் பிரார்த்தனையில் அங்கு ஈடுபட்டு இருந்தனர். அப்போது பிரார்த்தனையை சீர்குலைக்கும் விதமாக திடீரென ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன.
பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியது. இருப்பினும் இந்த தாக்குதலில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. குண்டுகள் வீசப்பட்டதையும் பொருட்படுத்தாமல் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி பிரார்த்தனைக்கு பிறகு பக்ரீத் தின சிறப்பு உரையாற்றினார். பக்ரீத் கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் விதமாக காபூல் நகரில் 3 இடங்களில் இதே பாணியில் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


