முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி-குண்டாறு உள்ளிட்ட அனைத்து நீர்ப்பாச திட்டங்களுக்கும் தடை கோரி கர்நாடகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

செவ்வாய்க்கிழமை, 20 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக கோபத்தில் உள்ள கர்நாடக அரசு, தமிழகத்தின் முக்கிய திட்டமான காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளிட்ட அனைத்து நீர்ப்பாசன திட்டங்களுக்கும் தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக நலன் பாதிக்கப்படும் என்பதால் அனைத்து கரசியல் கட்சிகளையும் திரட்டிய தமிழக அரசு மிகப்பெரிய அரசியல் அழுத்தத்தை கர்நாடக அரசுக்கு அளித்ததன் காரணமாக மத்திய அமைச்சர் அத்திட்டம் நிறைவேறாது என உறுதியளித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த கர்நாடக அரசு காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட தமிழகத்தில் நிறைவேற்றப்படும் நீர்பாசன திட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், காவிரி விவகார தீர்ப்பின் படி தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரின் அளவை விட கூடுதலாக எடுத்துக் கொள்ள உரிமை கிடையாது.  எனவே காவிரி- வைகை -குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற அனுமதி அளிக்கக் கூடாது, அது மட்டுமல்லாமல் காவிரியின் குறுக்கே எந்த நீர் திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது. மேலும் மொத்தம் பங்கீடு செய்யப்பட்ட மொத்த நீரான 483 டி.எம்.சி.க்கு மேல் இரு மாநில எல்லையான பில்லிகுண்டுலுவுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள நீர் கர்நாடகத்துக்கு உரிமையானது என ஏற்கனவே தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. 

எனவே கர்நாடகத்துக்கான நீரை மடை மாற்றி சேகரிக்கும் வகையில் அமையவுள்ள காவிரி- வைகை- குண்டாறு திட்டத்தை நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும். குறிப்பாக மேட்டுரிலிருந்து உபரி நீரை சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட ஏரிகளில் சேகரிக்கும் சர்பகங்கா திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.  புது கட்டளை நீர் பாசன திட்டம், ஆதனூரில் கொள்ளிடத்துக்கு குறுக்கே தடுப்பணை கட்ட தடை விதிக்க வேண்டும். கரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், நாமக்கல், குளித்தலை, முசிறி, சீர்காழி, உள்ளிட்ட இடங்களில் தடுப்பணைகள் திட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும். 

அதே போல ராஜவாய்கால் வடிகால் நீர் பாசன திட்டம், நொய்யல் ஆறு நீர் திட்டம், கல்லணை வடிகால் நீர் திட்டம், தடுப்பணைகள் கட்டப்படுவதும் தடுக்கப்பட வேண்டும் எனவே இது போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த நிரந்த தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.  அதே போல காவிரியில் வரும் உபரி நீரை சேகரிக்கும் வண்ணம் காவிரி - குண்டாறு - வைகை நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது, எனவே இந்த திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்க முடியாதபடி தடை உத்தரவு விதிக்க வேண்டும். ஏனெனில் இத்திட்டத்தை அனுமதிப்பதன் மூலம் காவிரி தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட்டில் குறிப்பிட்டுள்ள 177.25 டி.எம்.சி அளவை விட பங்கீட்டு அளவு அதிகமாகிறது. இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது.

சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது போல, மாநிலங்களுக்கு காவிரி நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டது போக உபரியாக காவிரி படுகையில் மீதமுள்ள நீரை தங்களின் மாநில பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்.  மேலும், காவிரி-வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் மூலமாக 45 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு கூடுதலாக கிடைக்கிறது. இதனால் எங்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசின் ஆறுகள் இணைப்புத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து