செம்மொழி தமிழ் விருது மீண்டும் வழங்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

dhamu-14 1

Source: provided

சென்னை: அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த செம்மொழி தமிழ் அறக்கட்டளை விருதுகள் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு துறையின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அந்த துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழை ஆட்சிமொழியாக்கும் நடவடிக்கைகளை மாவட்ட அலுவலர்களிடம் இருந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயரில் அமைக்கப்பட்ட செம்மொழி தமிழ் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்படும் விருதுகளை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அரசு அலுவலகங்களில் தமிழில் கையெழுத்திடுவது கோப்புகளை தமிழில் வெளியிடுவதோடு ஆங்கிலத்தில் உள்ள கோப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உலக தமிழ் மாநாடு நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்றும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து