Idhayam Matrimony

ஆகஸ்ட் முதல் வாரம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை

வியாழக்கிழமை, 22 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

புது டெல்லி: முதல்வர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்திற்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் வருகை தருகிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் ஆகஸ்ட் 7-ம் தேதி வருகிறது. அப்போது சட்டசபையில் கருணாநிதியின் உருவப் படத்தை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கருணாநிதியின் படத்திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்க கடந்த வாரம் 19-ம் தேதி டெல்லி சென்றார். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளின் போது அவரது படத்திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். 

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகத்திற்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  ஜனாதிபதி பங்கேற்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையே சபாநாயகர் அப்பாவு நேற்று முன்தினம் சட்டசபை செயலக அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  சட்டசபையில் கருணாநிதியின் உருவப்படத்தை சபை மண்டபத்தில் எந்த இடத்தில் வைக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மறைந்த தலைவர்களை பெருமைப்படுத்தும் வகையில் சட்டசபை கூட்டரங்கில் இதுவரை திருவள்ளுவர், மகாத்மா காந்தி, ராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணா, காயிதே மில்லத், அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ராமசாமி படையாச்சியார், வ.உ.சி.சிதம்பரனார், ப.சுப்பராயன், ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார் ஆகிய 15 பேர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இப்போது 16-வதாக முன்னாள் முதல்வர்  கருணாநிதிக்கு முழு உருவப்படம் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து