ஒலிம்பிக்கில் ' பதக்கம் ' வென்றால் பயிற்சியாளர்களுக்கு பரிசுத்தொகை இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

Rajiv-Mehta 2021 07 24

Source: provided

புதுடெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வீரர், வீராங்கனைகள் பதக்கம் வென்றால் அவர்களது பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.

பயிற்சியாளர்களுக்கு...

தங்கம் வென்றால் சம்பந்தப்பட்ட பயிற்சியாளருக்கு ரூ. 12.5 லட்சம், வெள்ளி வென்றால் ரூ. 10 லட்சம், வெண்கலம் வென்றால் ரூ. 7.5 லட்சம் வழங்கப்படவுள்ளது. இதுபற்றி இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச்செயலர் ராஜீவ் மேத்தா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியது:

விஜய் சர்மாவுக்கு... 

"வீரர், வீராங்கனைகளுடன் டோக்கியோவில் பயிற்சியளித்த பயிற்சியாளர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். அவர்களுக்கு இது பெரிதளவில் ஊக்கமளிக்கக் கூடியதாக இருக்கும். மீராபாய் பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும்." டோக்கியோ ஒலிம்பிக் பளு தூக்குதலில் இந்தியாவின் மீராபாய் 49 கிலோ எடைப் பிரிவில் சனிக்கிழமை வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து