முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன்: காலிறுதி வாய்ப்பை இழந்த இந்தியா

செவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி பிரிட்டன் ஜோடியை வீழ்த்தியது, ஆனாலும் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது.

நேர் செட்களில்... 

பிரிட்டன் ஆடவர் இரட்டையர் ஜோடி பென் லேன், சான் வெண்டி ஆகியோரை இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-17, 21-9 என்று நேர் செட்களில் வென்றது.

தைபே ஜோடி... 

ஆனாலும் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை, காரணம், இதற்கு முன்னதாக நடைபெற்ற இரட்டையர் போட்டியில் சைனீஸ் தைபே அணியின் ஆடவர் ஜோடி லீ யாங், சீ-லின் வாங் ஜோடி வெற்றி பெற்றதால் இந்திய ஜோடி வெற்றி பெற்றும் காலிறுதிக்கு முன்னேற முடியவில்லை.

இந்தோனேசிய... 

இதற்கு முந்தைய போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி இந்தோனேசிய ஜோடியிடம் தோல்வி அடைந்தது. 13-21, 12-21 என்று சாத்விக்-சிராக் ஜோடி இந்தோனேசியாவின் கெவின் சஞ்சயா - பெர்னால்டி கிடியன் ஜோடியிடம் தோல்வி கண்டது.

வாய்ப்பு பறிபோனது...

ஆனால் இந்த இந்தோனேசிய ஜோடியான கெவின் சஞ்சயா-கிடியன் ஜோடியை சீன தைபே ஜோடியான யாங் லீ - சீ லின் வாங் ஜோடி வீழ்த்தியது. இதனால் இந்தியா காலிறுதிக்கு முன்னேறாமல் போனது. இந்தோனேசியா ஜோடி சீன தைபே ஜோடியை வீழ்த்தியிருந்தால் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியிருக்கும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து