மேற்குவங்க வெள்ள பாதிப்பு: பிரதமர் மோடி நிதியுதவி

Modi 2021 07 23

Source: provided

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதேபோல் காயமடைந்தோருக்கு ரூபாய் 50,000 நிதியுதவியையும் அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கு வங்கத்தில் வெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும். காயமடைந்தோருக்கு ரூபாய் 50,000 வழங்கப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் சில பகுதிகளில் பலத்த மழையால் அணைகள் நிறைந்து அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜியுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார்.

நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்றும் பிரதமர் உறுதி அளித்திருந்தார்.

அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி இப்போது அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து