முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் சேவை மத்திய அமைச்சர் - முதல்வர் பசவராஜ் துவக்கி வைத்தனர்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஆகஸ்ட் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூரு: பெங்களூருவில் நாயண்டஹள்ளி - கெங்கேரி இடையே மெட்ரோ ரயில் சேவையை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

பெங்களூருவில் நாகசந்திரா முதல் பனசங்கரி எலச்சனஹள்ளி வரையிலும், பையப்பனஹள்ளி முதல் நாயண்டஹள்ளி வரையிலும் 42 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் சேவை கடந்த 9 ஆண்டுகளுக்கு ஆண்டு தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் விஸ்தரிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் எலச்சனஹள்ளியில் இருந்து அஞ்சனாபுரா வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு அதில் ரயில் சேவை தொடங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ரூ.1,920 கோடி செலவில் நாயண்டஹள்ளியில் இருந்து கெங்கேரி வரை ஏழரை கிலோ மீட்டர் நீளத்திற்கு 2-வது நீட்டிப்பு திட்டத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாதை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்து உள்ளன. இதையடுத்து அந்த நீட்டிப்பு பாதையில் நேற்று 29-ம் தேதி மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி அந்த இந்த மெட்ரோ ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சி நாயண்டஹள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றறது. இதில் முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப்சிங்புரி ஆகியோர் கொடி அசைத்து வைத்து ரயில் சேவையை தொடங்கி வைத்தனர். இதில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து