முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபலமான உலக தலைவர்கள் பட்டியல்: பிரதமர் மோடி முதலிடம்

ஞாயிற்றுக்கிழமை, 5 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: உலகளவில் பிரபலமான தலைவர்கள் தொடர்பாக, நடத்தப்பட்ட ஆய்வில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்து உள்ளார். அவருக்கு 70 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள தலைவர்களின் புகழ் தொடர்பாக தி மார்னிங் கன்சல்ட் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானவேல் லோபஸ், இத்தாலி பிரதமர் மாரியோ டிரகி, ஆஸி., பிரதமர் ஸ்காட் மாரிசன், கனடா பிரதமர் ட்ருதேவ் ஆகியோர் அடங்குவார்கள்.

செப்டம்பர் 2-ல் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளின்படி, பிரதமர் மோடி பிரபலமான தலைவராக தேர்வாகி உள்ளார். அவரை, 70 சதவீதம் பேர் ஆதரித்து உள்ளனர்.  மெக்சிகோ ஆண்ட்ரஸ் மானுவேல் லோபஸ்-க்கு 64 சதவீதம் பேரும், இத்தாலி பிரதமர் மரியோ டிராகிக்கு 63 சதவீதம் பேரும், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலுக்கு 52 சதவீதம் பேரும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு 48 சதவீதம் பேரும், ஆஸி., பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு 48 சதவீதம் பேரும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 45 சதவீதம் பேரும், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு 39 சதவீதம் பேரும், தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு 38 சதவீதம் பேரும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்சுக்கு 35 சதவீதம் பேரும், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு 34 சதவீதம் பேரும், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவுக்கு 25 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து