முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்களில் அனுமதி மறுப்பு; வாசலில் நின்று பக்தர்கள் தரிசனம்

வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர் 2021      ஆன்மிகம்
Image Unavailable

விநாயகர் சதூர்த்தியான நேற்று தமிழகம் முழுவதும் கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோவில் வாசலில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விநாயகர் சிலைகள் 3 அடிக்கு மிகாமல் பொதுமக்கள் வீட்டினுள்ளேயே வழிபட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.   பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவோ, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவோ அரசு தடை விதித்துள்ளது. மேலும், அரசு வழிகாட்டுதல்களை மீறி செயல்படும் அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் எந்தவித அசாம்பாவிதம் ஏற்படாத வகையில், மாநகரம் முழுவதும் சட்டம் ஒழுங்கு போலீசார், ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

சேலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயிலில் ராஜகணபதிக்கு தங்க கவச அலங்காரம் நடைபெற்றது; பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கோவில் வாசலில் நின்று தரிசனம் செய்தனர்.   தஞ்சை மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரே தடையை மீறி இந்து முன்னணி அமைப்பினர் விநாயகர் சிலை வைத்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விநாயகர் சதுர்த்தியை  முன்னிட்டு  பிள்ளையார்பட்டியில் பக்தர்களுக்கு அனுமதி வழங்காததால்  வெறிச்சோடி காணப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலில் நேற்று பக்தர்கள் தரிசிக்க அனுமதி மறுக்கப்பட்டது. மாணிக்க விநாயகருக்கு 30 கிலோ, உச்சிப்பிள்ளையாருக்கு 30 கிலோ என 60 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் குறைந்த அளவிலான விநாயகருக்கு படைக்கப்பட்டது.  திருச்சி, தஞ்சாவூர், கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி விநாயகர் சிலை வைத்து இந்து முன்னணியினர் வழிபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து