அநீதியான தேர்வை 1.10 லட்சம் மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள் கமல்ஹாசன் கருத்து

Kamal 2021 07 19

Source: provided

சென்னை: ஓர் அநீதியான தேர்வை 1.10 லட்சம் மாணவர்கள் எதிர்கொள்கிறார்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது.  இந்த தேர்வு மொத்தம் 13 மொழிகளில் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 16 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு இடையில் இந்த தேர்வை சந்திக்கின்றனர். 

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

ஓர் அநீதியான தேர்வை  1.10 லட்சம் தமிழ் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களை பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்? என்றும் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து