முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனபெல் சேதுபதி திரைப்படம் குறித்து இயக்குனர்கள் பேட்டி

புதன்கிழமை, 15 செப்டம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் - சுதன் சுந்தரம், G. ஜெயராம் தயாரிக்க, தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும், காமெடி திரைப்படம் அனபெல் சேதுபதி விஜய் சேதுபதி, டாப்ஸி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள இந்தப்படத்தை, இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு திரைப்படவுலகை சார்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்துள்ளனர். உலகமெங்கும் நாளை 17-ம் தேதியன்று வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், இயக்குநர் சுந்தர்ராஜனும் அவரது மகனும் அறிமுக இயக்குநருமாகிய, தீபக் சுந்தர்ராஜன் இணைந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மூத்த இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன், நான் சினிமாவுக்கு வந்து 40 வருடங்கள் ஆகி விட்டது.

எனது ஆரம்ப கால படங்களுக்கு விமர்சனம் தந்த பத்திரிக்கையாளர்கள் இங்கு உள்ளனர். எனது திரைப்பயணத்திற்கு ஆதரவும், பாராட்டும் தந்த பத்திரிக்கையாளர்கள் என் மகனுக்கும் அதே ஆதரவை தந்து வளர்த்து விட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு படத்தின் கதை தெரியாது படம் பற்றி எதுவும் தெரியாது. அவனே வளர்ந்து வரட்டும் என்று அவன் விசயத்தில் எதிலும் தலையிடவில்லை. தயாரிப்பாளர் முழுப்படத்தையும் பார்த்து விட்டு நன்றாக வந்திருப்பதாக போன் செய்து சொன்னார் சந்தோஷமாக இருந்தது. இங்கு வந்து பாடல்கள் டிரெய்லர் பார்த்த போது அவனிடம் முதல் பட தயக்கம் எதுவும் இல்லாமல், தெளிவாக செய்திருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.

என் மகனுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி என்றார். பின்னர் பேசிய இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன், தயாரிப்பாளர் தான் இந்தப்படம் இவ்வளவு பெரிதாக வரக்காரணம். விஜய் சேதுபதி, டாப்ஸி, ராதிகா மேடம் என இப்படத்தில் என்னை நம்பி நடித்த அனைவருக்கும் நன்றி.

இப்படம் ஹாரர் இல்லை. இது ஒரு பேண்டஸி காமெடி படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இப்படம் இருக்கும். உங்களது ஆதரவை தாருங்கள். அப்பாவிடம் மனித பண்புகளை தான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன் இயக்கத்தை நான் இயக்குநர் ஏ.எல். விஜய்யிடம் தான் கற்றுக்கொண்டேன்.

தொடர்ந்து காமெடி படங்களே செய்ய ஆசை இல்லை, வித்தியாசமான களங்களில் படங்கள் செய்வேன். நடிக்கும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லை. தொடர்ந்து படங்கள் இயக்குவதில் தான் கவனம் செலுத்தவுள்ளேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து