முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாப்பின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார் : கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

சண்டிகர் : பஞ்சாப் மாநில புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் பதவியேற்றுக்கொண்டார். சரண்ஜித் சிங் பதவியேற்றுக்கொண்ட போது அங்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரான நவ்ஜோத்சிங் சித்து மற்றும் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

முன்னாள் முதலமைச்சரான அமரீந்தர் சிங் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டார். நேற்று முதலமைச்சர் மட்டுமே பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

அடுத்து அமைச்சரவை எப்போது பதவியேற்கும் என்பதை காங்கிரஸ் கட்சி பின்னர் முடிவு செய்து அதற்கான தகவல்கள் தெரிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகிறார்கள். முதலமைச்சர் குறித்து எழுந்த சர்ச்சைகளை முடித்துவைக்கும் விதமாக நேற்று முன் தினம் நடைபெற்ற ஆலோசனையில் சரண்ஜித் சிங் முதல்வராக பதவியேற்பார் என முடிவு செய்யப்பட்டு நேற்று பதவி பிரமாணம் நடந்துள்ளது. அடுத்த கட்டமாக அமைச்சரவையின் முழு விவரங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

புதிய முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜித், சித்துவின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத் தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து