முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி: ரஷிய பல்கலை.யில் தாக்குல் நடத்தியவன் சுட்டுக்கொலை

திங்கட்கிழமை, 20 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

ரஷிய பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய மாணவரை போலீசார் சுட்டுப் பிடித்ததாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரஷியாவின் பெர்ம் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மாணவர் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் காயமடைந்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கி சூடு நடத்திய மாணவரை சுட்டு பிடித்துள்ளனர். பலத்த காயமடைந்த அந்த மாணவர் இறந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ரஷியாவில் இந்த ஆண்டு கல்வி நிலையங்களில்  நடந்த 2-வது துப்பாக்கி சூடு இதுவாகும். பொதுவாக ரஷிய கல்வி நிறுவனங்களில் அதிக பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வமாக துப்பாக்கிகளை வாங்குவதில் உள்ள சிரமம் காரணமாக, கல்வி நிலையங்களில் துப்பாக்கி சூடு நடப்பது அரிது. எனினும்,  வேட்டை துப்பாக்கிகளை பதிவு செய்ய முடியும் என்பதால் ஒரு சில இடங்களில் அசம்பாவிதம் நடக்கிறது. 

இந்திய தூதரகம் உறுதி

 

தாக்குதல் குறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில்,“ரஷிய பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் நலம்பெற வாழ்த்துகிறோம். அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். உள்ளூர் அதிகாரிகள் மற்றும் இந்திய மாணவர்களின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து