முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போதைப் பொருள் விவகாரம்: நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யனுக்கு அக்.7 வரை காவல்

செவ்வாய்க்கிழமை, 5 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

மும்பை : போதைப்பொருள் விவகாரத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை நடத்தி வரும் விசாரணையில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை வரும் 7-ம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க புலனாய்வாளர்களுக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

திரைப்பட உலகில் மீண்டும் போதை மருந்துகள் கலாசாரம் விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தற்போதுவரை எந்த பிரபல நட்சத்திரமும் போதை மருந்து விவகார்ததில் நேரடியாக ஈடுபடவில்லை. ஆனாலும் பாலிவுட்டின் சிறந்த நட்சத்திரமாக அறியப்படும் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் பெயர் சமீபத்திய சிக்கலில் தொடர்புபடுத்தப்பட்டு அவர் விசாரணை வளையத்தில் இருக்கிறார்.

கடந்த 2-ம் தேதி நள்ளிரவில் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறையினர் மும்பையில் ஒரு சொகுசு கப்பலில் சோதனை நடத்தியது. அப்போது அதில் இருந்த ஆர்யன் கான் உட்பட எட்டு பேரை அதிகாரிகள் பிடித்தனர். அதைத்தொடர்ந்து இதில் ஆரியன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் ஒரு நாள் என்.சி.பி காவலில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.

கப்பலில் போதைப்பொருள் இருந்ததாகவும் அதை பறிமுதல் செய்ததாகவும் கூறிய அதிகாரிகள், சம்பவ நேரத்தில் ஆர்யன் தரப்பில் இருந்து போதைப்பொருளை பறிமுதல் செய்யவில்லை என்றும் கூறினர். ஆனால், அதற்காக அவரை இந்த வழக்கில் இருந்து ஒதுக்கிவிட முடியாத நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். மும்பை 'குரூஸ் பார்ட்டி' வழக்கில் ஆர்யன் கான் ஜாமீனில் தன்னை விடுதலை செய்யக் கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்த நிலையில், ஆர்யன் வாட்ஸ்அப் செயலியில் இடம்பெற்ற சில உரையாடல்கள் அவருக்கும் போதைப்பொருள் பயன்படுத்தும் கும்பலுக்கும் இடையிலான தொடர்புக்கு ஆதாரம் என்று தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்புத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஆர்யன் கைதுசெய்யப்பட்டபோது, அவருடன் இருந்த அர்பாஸ், மும்முன் தமேச்சா, ஆர்யன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரது விசாரணை காவல் நாளை வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து