முக்கிய செய்திகள்

எங்கள் கோபம் இந்தியா மீது அல்ல: பாக். முன்னாள் வீரர் சோயிப் அக்தர்

Shoaib-Akhtar 2021 10 23

Source: provided

லாகூர் : பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரை ரத்து செய்த நியூசிலாந்து மீதுதான் எங்களுக்குக் கோபம் உள்ளது, இந்தியா மீது அல்ல என முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

அச்சுறுத்தல்...

பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டு பாகிஸ்தானுக்கு வந்தது நியூசிலாந்து அணி.  எனினும் போட்டி தொடங்கும் தினத்தன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதையடுத்து பாகிஸ்தானில் இரு டி20 ஆட்டங்களில் விளையாடவிருந்த இங்கிலாந்து அணியும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தது.

நியூசி. மீதுதான்...

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை மோதுகின்றன. இதை முன்னிட்டு பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் ஒரு பேட்டியில் கூறியதாவது., எங்களுடைய உண்மையான கோபம் நியூசிலாந்து மீதுதான். அவர்களைத் தோற்கடிக்க விரும்புகிறோம். இந்தியாவுடன் எங்களுக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லை. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்தியாவுக்குத்தான் அதிக அழுத்தம் இருக்கும். மைதானம் முழுக்க இந்திய ரசிகர்கள் இருப்பார்கள். 

பிரச்னை இல்லை... 

உங்களுடைய தொலைக்காட்சி ஊழியர்கள் இருப்பார்கள். அதனால் இதில் தோற்றால் எங்களுக்குப் பிரச்னை இல்லை. பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்துவிட்டால் மிகப்பெரிய வீரர்களுக்கும் தடுமாற்றம் ஏற்படும். ஆட்டத்தில் பாகிஸ்தானை விடவும் இந்தியா நிலைமையை நன்குக் கையாண்டால் நல்லது. ஒருவேளை பாகிஸ்தான் ஆச்சர்யப்படுத்தினால் என்ன நடக்கும் எனக் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து