முக்கிய செய்திகள்

கஞ்சா விற்பனை: பழனி அருகே ஒருவர் கைது

arrest 2021 07 03

Source: provided

பழனி : பழனி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி அடிவாரம் போலீசார், கொடைக்கானல் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் ஆயக்குடி அருகே உள்ள அமரபூண்டியை சேர்ந்த முருகன் (வயது 55) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து