முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 7 ஆண்டுகளில் 157 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு 17 ஆயிரத்து 691 கோடி ரூபாய் முதலீடு : மத்திய அரசு தகவல்

திங்கட்கிழமை, 25 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நாடுமுழுவதும் கடந்த 2014ம் ஆண்டு முதல் அனுமதி வழங்கப்பட்ட 157 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்காக ரூ.17,691.08 கோடி முதலீடு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது.,

கடந்த 2014ம் ஆண்டு முதல், 157 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி, இந்த திட்டங்களில் ரூ.17,691.08 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்தத் திட்டங்கள் நிறைவடையும்போது, இளநிலை மருத்துவப்படிப்பில் 16,000 இடங்கள் சேர்க்கப்படும். 64 புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கியுள்ளதால், 6,500 இடங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள மாநில அரசு மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ரூ.2,451 கோடி வழங்கியுள்ளது. புதிய மருத்துவக் கல்லூரிகள், தற்போதுள்ள மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளைத் தொடங்க மாநில / மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகள் மேம்படுத்தப்படுகின்றன. நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 10,000 எம்.பி.பி.எஸ் இடங்களை உருவாக்கும் நோக்கில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மத்திய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் இத்திட்டங்களுக்கு 90:10 என்ற விகித அடிப்படையில் மத்திய அரசும், மாநில அரசும் நிதிப் பங்களிப்பை அளிக்கின்றன. மற்ற மாநிலங்களில் 60: 40 என்ற விகிதத்தில் மத்திய அரசும், மாநில அரசும் நிதிப் பங்களிப்பை அளிக்கின்றன. 15 மாநிலங்களில் உள்ள 48 மருத்துவக் கல்லூரிகளில் 3,325 மருத்துவ இடங்களை அதிகரிக்க மத்திய அரசு தனது பங்காக ரூ.6,719.11 கோடியை விடுவித்துள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து