முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ஜேசன் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி

புதன்கிழமை, 27 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 சுற்றில் ஜேசன் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

124 ரன்கள்...

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12  சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. நேற்று அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து, வங்காளதேசம் அணிகள் விளையாடின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. 

61 ரன்கள்... 

 

இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்து வெற்றிக்கான பாதை அமைத்துக்கொடுத்தார். ஜாஸ் பட்லர் 18 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் டேவிட் மலன் ஆட்டமிழக்காமல் 28 ரன்கள், பேர்ஸ்டோ ஆட்டமிழக்காமல் 8 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 35 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை எட்டியது.  இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்கள் குவித்ததால், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜேசன் ராய் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து