முக்கிய செய்திகள்

குண்டு ஒன்னு வச்சிருக்கேன் – இசையமைப்பாளர் கிறிஸ்டி

ஞாயிற்றுக்கிழமை, 31 அக்டோபர் 2021      சினிமா
Christie 2021 10 31

Source: provided

ராஜா முரளிதரன் இயக்கத்தில் ஆர். துரைராஜ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நறுவி. இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருப்பவர் கிறிஸ்டி.

நல்ல இசையைக் கொடுத்த இவருக்கு பல்வேறு இயக்குனர்களும் சினிமா பிரபலங்களும் அழைத்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வாழ்த்து மழையில் நனைந்துள்ள கிறிஸ்டி தனக்கு இசை அமைப்பாளராக வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பது பற்றி விவரிக்கிறார். நான் கர்நாடிக், வெஸ்டர்ன், கிளாசிக்கல், ஹிந்துஸ்தானி ஆகியவற்றை முறையாக கற்றுள்ளேன்.

எனது சிறுவயது முதற்கொண்டே கிறிஸ்தவ தேவாலயங்களில் கீபோர்டு வாசித்து வந்துள்ளேன்.  சினிமாவில் இசை யமைப்பாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டு பத்து வருடங்களுக்கு மேல் பல முயற்சிகள்  செய்துள்ளேன். குறைந்தது 80 இயக்குனர்களையாவது சந்தித்து வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை. கடைசியில் தனது நண்பரான திலீப் மூலமாக இயக்குனர் பா.ரஞ்சித்தை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டு அதன் மூலமாக கிடைத்த முதல் சினிமா வாய்ப்புதான் இந்த நருவி திரைப்படம் என்றார்.

இந்த தேரத்தில் கோபி, துரைராஜ், செல்லா, முரளிதரன் உள்ளிட்ட பலருக்கும் நன்றி கூறுகிறேன் என்றார். குண்டு ஒன்னு வச்சிருக்கேன், பகை வர்க்கம் ஆகிய இரண்டு படங்களுக்கு  தற்போது இசையமைத்து வருவதாக மகிழ்ச்சியுடன் கூறும் இவர், ஏ,ஆர்.ரஹ்மான் போல இரண்டு ஆஸ்கார் அவார்டு வாங்குவதுதான் தன் லட்சியம் எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து