முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெய்ன் லார்கின்ஸ் நினைவுதினம்: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் இந்தியா - இங்கிலாந்து அணி வீரர்கள்

புதன்கிழமை, 2 ஜூலை 2025      விளையாட்டு
INDIA 2024-12-04

Source: provided

பர்மிங்காம் : வெய்ன் லார்கின்ஸ் நினைவுதினத்தை முன்னிட்டு 2-வது டெஸ்டி போட்டியிலும் இந்தியா- இங்கிலாந்து அணி வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

சுற்றுப்பயணம்.... 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

அணியில் மாற்றம்...

இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பும்ரா, சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கருப்பு பட்டையுடன்...

இந்நிலையில் இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் வெய்ன் லார்கின்ஸை நினைவுகூரும் விதமாக இரு அணிகளும் கருப்பு கைப்பட்டைகளை அணிந்துள்ளனர். அகமதாபாத் விமான விபத்து காரணமாக முதல் டெஸ்டிலும் இரு அணி வீரர்களும் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து