முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியில் சிறப்பாக செயல்படுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

புதன்கிழமை, 2 ஜூலை 2025      தமிழகம்
Anbil 2

திருவாரூர், குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பணிபுரிய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான-2025 ஆண்டுக்கான அடைவு தேர்வு குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் மாவட்டத்தில் உள்ள 370 தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் எந்த பாடத்தில் திறன் குறைந்து இருக்கிறார்கள்? என்பதை ஆய்வு செய்து, அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை வைத்து மாவட்டம் முழுவதும் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 8-வது மாவட்டமாக திருவாரூரில் குறைந்தபட்ச செயல்திறன் கொண்ட பகுதியை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை நேரடியாக வரவழைத்து, அடுத்த முறை அவர்கள் சிறப்பாக உற்சாகத்துடன், ஊக்கத்துடன் பணிபுரிய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாநில அடைவு திறனாய்வு மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் பிராகரஸ் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக கோட்டூர், கொரடாச்சேரி, நன்னிலம், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும், முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் இதனை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து