முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமிக்கு ஐகோர்ட் உத்தரவு

புதன்கிழமை, 2 ஜூலை 2025      விளையாட்டு
Mohammed-Shami 2024 07 24

Source: provided

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார். இந்த புகார்கள் அனைத்திற்கும் சமி மறுப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு முகமது சமி மற்றும் ஹாசின் ஜஹான் விவாகரத்து வழக்கு கொல்கத்தா குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஹசின் ஜஹான் தனது சொந்த செலவுக்கு ரூ.7 லட்சம் மற்றும் மகளின் பராமரிப்பிற்காக ரூ.3 லட்சம் என்று மொத்தமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

இந்நிலையில், கொல்கத்தா குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஹசின் ஜஹான் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், முகமது சமி, அவரது முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், ஜஹானின் தனிப்பட்ட பராமரிப்புக்காக மாதம் ரூ.1.5 லட்சமும், அவர்களின் மகளின் பராமரிப்பு மற்றும் செலவுகளுக்கு ரூ.2.5 லட்சமும் வழங்க வேண்டும் என்று சமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

________________________________________________________________________________________________________________________

இறுதிக்கு முன்னேறிய திருப்பூர்

திண்டுக்கல்லில் நடைபெற்ற குவாலிபையர் 1 சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேப்பாக் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். பவர்பிளே முடிவில் திருப்பூர் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்தது. இறுதியில், திருப்பூர் தமிழன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. சேப்பாக் அணி சார்பில் லோகேஷ் ராஜ் 2 விக்கெட்டும், விஜய் சங்கர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. சேப்பாக் அணியின் தொடக்க வீரர்களாக ஆஷிக்- மோகித் ஹரிஹரன் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஆஷிக் 14 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் சேப்பாக் அணி 16.1 ஓவரில் 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. எனவே 79 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி பெற்றது. திருப்பூர் அணி தரப்பில் இசக்கிமுத்து, மதிவாணன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் திருப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. 

________________________________________________________________________________________________________________________

புதிய பெயரில் சாம்பியன்ஸ் லீக்

சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் மறு உருவமாக 'உலக கிளப் சாம்பியன்ஷிப் தொடர்' 2026-ல் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஐபிஎல் தொடர், பாகிஸ்தானின் பிஎஸ்எல், ஆஸ்திரேலியாவின் BBL, தென்னாப்பிரிக்காவின் SA20, இங்கிலாந்தின் தி ஹன்ரட் போன்ற உலகெங்கிலும் உள்ள ஃபிரான்சைஸ் தொடர்களில் பட்டம் வென்ற அணிகளை ஒருங்கிணைத்து பிரமாண்ட தொடராக நடத்தப்படவுள்ளது.

அத்தொடரை உலக கிளப் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் மீண்டும் துவங்குவதற்கு முயற்சிகள் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் ரசிகர்களின் போதிய ஆதரவின்மை மற்றும் ஸ்பான்சர்ஷிப் பிரச்சனைகள் காரணமாக 2015-ம் ஆண்டு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 2009 - 2014 வரை நடைபெற்ற அந்தத் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 2 கோப்பைகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

________________________________________________________________________________________________________________________

சிறந்த கிரிக்கெட்டர் யார் ? பட்லர்

இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜாஸ் பட்லர் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம், இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜாக் காலிஸ் ஆகிய இருவரில் யார் சிறந்த கிரிக்கெட்டர் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பட்லர், நான் காலிஸ் என சொல்லப் போகிறேன். 

காலிஸ் சிறந்த கிரிக்கெட் வீரர் என ரிக்கி பாண்டிங் நேரடியாக சொல்லியிருக்கிறார். அவரது சாதனைகளை ஒன்றாகச் சேர்த்தால் பேட்டிங்கில் சச்சினும், பந்துவீச்சில் ஜாகீர் கானும் விளையாடியதற்கு சமம். நீங்கள் ஒரு அணியைத் தேர்வு செய்ய முயற்சிக்கிறீர்கள் என்றால் அதில் அவரை தாண்டி பார்ப்பது மிகவும் கடினம் என தெரிவித்தார்.

________________________________________________________________________________________________________________________

கவுர் அபார்: இந்தியா வெற்றி

இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது.ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரை சதம் கடந்து 63 ரன்னில் அவுட்டானார்.

அமன்ஜோத் கவுர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 63 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். ரிச்சா கோஷ் 32 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் உள்ளார். இங்கிலாந்து சார்பில் லாரன் பெல் 2 விக்கெட்டும், லாரன் பைலர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சில் சிக்கி முன்னணி வீராங்கனைகள் விரைவில் வெளியேறினர். இறுதியில், இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகி விருது அமன்ஜோத் கவுருக்கு அளிக்கப்பட்டது.

________________________________________________________________________________________________________________________

தென் ஆப்பிரிக்க வீரர் விலகல்

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் 328 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் சீனியர் வீரர்கள் இடம் பெறவில்லை. இந்த அணியை கேசவ் மகராஜ் வழிநடத்துகிறார்.இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டியில் வரும் 6ம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து கேசவ் மகராஜ் விலகி உள்ளதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. முதல் போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகி உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக சீனுரான் முத்துசாமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 2வது போட்டிக்கான தென் ஆப்பிரிக்க அணியை வியான் முல்டர் வழிநடத்துவார் எனவும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

________________________________________________________________________________________________________________________

கோகோ காப் வெளியேற்றம் 

ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகவும் கவுரவமிக்கதும், முதன்மையானதுமான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கோகோ காப் (அமெரிக்கா), உக்ரைனின் தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் அனுபவ வீராங்கனையான கோகோ காப் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் கோகோ காப்பை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்ட கோகோ காப் தொடரில் இருந்து வெளியேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து