முக்கிய செய்திகள்

தேள் இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 22 நவம்பர் 2021      சினிமா
Scorpion-Music 2021 11 22

Source: provided

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள “தேள்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா,  சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. STUDIO GREEN ,  K.E. ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இசை C.சத்யா, இப்படத்தில் பிரபுதேவா, ஈஸ்வரி ராவ் இருவரும் அம்மா,  மகனாக நடித்துள்ளனர். இவ்விழாவில் பிரபுதேவா பேசுகையில், ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் உதவி நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் புதிய தளத்தில் இயக்குனராக தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. மேலும் நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன். முழு டப்பிங்கையும் அரை நாளில் முடித்துவிட்டேன் அந்த அளவுக்கு எனக்கு குறைவான வசனங்களே படத்தில் உள்ளது என்றார். தயாரிப்பாளர் K.E. ஞானவேல் ராஜா பேசுகையில், இப்படம் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களின் அம்மாக்களை ஞாபகப்படுத்தும் படமாகவும் ஒரு மிகச்சிறந்த குடும்பப்படமாகவும் இருக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து