எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எனது தொகுதியின் சாலைகள் நடிகை கத்ரீனா கைப் கன்னங்கள் போன்று இருக்க வேண்டும் என ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர குடா சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தான் சட்டமன்றத்தில் உதய்பூர்வதி தொகுதியில் இருந்து எம்எல்ஏ -வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காங்கிரஸ் கட்சியின் ராஜேந்திர குடா. கடந்த வாரம் முதல்வர் அசோக் கெலாட் தனது மந்திரி சபையில் மாற்றம் செய்தார். அப்போது ராஜேந்திர குடா அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மந்திரியான பிறகு தனது தொகுதிக்கு முதல் முறையாக சென்ற ராஜேந்திர குடா பாவோன்க் கிராமத்தில் கூடியிருந்த உள்ளூர் மக்களிடம் உரையாடினார். அப்போது அங்கு இருந்த மக்கள் அவரிடம் தரமான சாலைகள் அமைத்து தர கூறி கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர் , அங்கு இருந்த பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளரை சுட்டிக்காட்டி "எனது தொகுதியின் சாலைகள் நடிகை கத்ரீனா கைப் கன்னங்கள் போன்று இருக்க வேண்டும் " என கேலியாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட் உலகின் முன்னணி நடிகை கத்ரீனா கைப் கன்னம் குறித்து ராஜஸ்தான் மந்திரி ராஜேந்திர குடா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |