முக்கிய செய்திகள்

நொய்டா சர்வதேச விமான நிலையம் வட இந்தியாவின் நுழைவு வாயில்: பிரதமர் மோடி பெருமிதம்

Modi 2021 11 25

நொய்டா சர்வதேச விமான நிலையம் வட இந்தியாவின் விமானங்களின் தளவாட நுழைவாயிலாக செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் இந்தியாவில் ஐந்து சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட ஒரே மாநிலமாக உத்தரப்பிரதேசம் உருவாகிறது. புதிதாக அமையவுள்ள நொய்டா விமான நிலையம் டெல்லி தலைநகர் அருகே  இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக இருக்கும்.  இது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் நெருக்கடி குறைவதற்கு உதவும். இதன் அமைவிடம் காரணமாக டெல்லி, நொய்டா, காசியாபாத், அலிகார், ஆக்ரா, ஃபாரிதாபாத் மற்றும் அருகில் உள்ள பகுதிகள் உள்ளிட்ட நகரங்களின் மக்களுக்கு பயன்படும். 

இந்தநிலையில் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் மோடி பேசியதாவது:-

நொய்டா சர்வதேச விமான நிலையம் வட இந்தியாவின் தளவாட நுழைவாயிலாக செயல்படும்.  நொய்டா சர்வதேச விமான நிலையம்  விமானங்களை பழுதுபார்க்கும் மிகப்பெரிய மையமாக இருக்கும். விமானத்தின் பராமரிப்பு பணிகள் இங்கு மேற்கொள்ளப்படும். இங்குள்ள 40 ஏக்கர் நிலப்பரப்பில் விமானங்கள் பழுது மற்றும் மறுசீரமைப்பு செய்யப்படும் போது இங்கு உள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து