முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 120 கோடியை நெருங்குகிறது

வியாழக்கிழமை, 25 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை 119.38 கோடியைக் கடந்தது.

இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது.,

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 90,27,638 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்தக் கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, நேற்று நிலவரப்படி 119.38 கோடியைக் (1,19,38,44,741) கடந்தது. 1,23,73,056 அமர்வுகள் மூலம் இந்தச் சாதனைப் படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 10,264 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,39,67,962 ஆக அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.33 சதவீதமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகளால், தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து 151 நாட்களாக 50,000-க்கும் கீழ் உள்ளது. 

வாராந்திரத் தொற்று உறுதி கடந்த 62 நாட்களில் 2 சதவீதத்திற்கும் குறைவாக நீடித்து, தற்போது 0.90 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.79 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து 86 நாட்களாக 3 சதவீதத்திற்குக் கீழே 52 நாட்களாக 2 சதவீதத்திற்குக் குறைவாகவும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து