முக்கிய செய்திகள்

தி.மு.க. வரும்போதெல்லாம் தமிழகம் ‘அமைதி பூங்கா’ பட்டத்தை இழக்கிறது: எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்

Edappadi 2020 11-16

தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

பட்டாக்காத்திகளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்களை கைது செய்த காவல்துறையின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வினரால் அரசு அதிகாரிகள் மிரட்டப்படுதல், அதிகார துஷ்பிரயோகம், சமூக ஊடகவியலாளர்களை அச்சுறுத்துதல், காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் பணி செய்யும் போது சமூக விரோதிகளால் தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளன.

அந்த வரிசையில் தாம்பரம் அருகே காவல்துறையினரின் வாகன சோதனையின் போது பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் பிடிபட்டுள்ளது காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஒவ்வொரு முறையும் தி.மு.க. ஆட்சிக்கு வரும் பொழுதும் தமிழகம் அமைதி பூங்கா என்ற பட்டத்தை இழந்து வருவதற்கு இது மற்றும் ஒரு எடுத்துக்காட்டு.

காவல் துறையினருக்கு அம்மாவின் அரசு அளித்ததுபோல் முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதித்து சட்டம் ஒழுங்கை இந்த அரசு நிலைநாட்ட வேண்டும் என்று அந்த டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து