முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான சேவையை ரத்து செய்த நாடுகள்: தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேற முடியாமல் வெளிநாட்டு பயணிகள் அவதி

சனிக்கிழமை, 27 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கேப் டவுன் : உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவிய நாடுகளுக்கு பல்வேறு நாடுகள் விமான சேவையை துண்டித்துள்ளன. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேற முடியாமல் வெளிநாட்டு பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த ஒமைக்ரான் என்ற உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகையான ‘ஒமைக்ரான்’ கொரோனா வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. மேலும் வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளதாகவும் கூறி உள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் 10 மடங்கு விரீயம் கொண்டது. தென் ஆப்பிரிக்காவில் இந்த வாரம் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ் போத்ஸ்வானா, ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை துண்டித்துள்ளன. போக்குவரத்து கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. 

பல்வேறு நாடுகள் விமான சேவையை துண்டித்திருப்பதால் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள், தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். உறவினர்களை பார்ப்பதற்காகவும், தொழில்ரீதியாகவும் தென் ஆப்பிரிக்கா வந்தவர்கள் கடைசியாக கிடைத்த விமானங்களில் நாடு திரும்ப முயன்றனர்.  ‘ஒமைக்ரான்’ வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் பணியை தொடங்கி உள்ளது. விமான நிலையங்களில் எச்சரிக்கையை தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து