முக்கிய செய்திகள்

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பில்லை : திரிணாமுல் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      இந்தியா
Mamtha 2021 11 28

Source: provided

புதுடெல்லி : காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது என அக்கட்சியின் எம்.பி சுதிப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று 29-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே அனைத்து எதிர்கட்சிகளின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். 

இந்த கூட்டத்தில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய விஷயங்கள் பற்றி இன்று காங்கிரஸ் ஆலோசனை நடத்துகிறது. இந்நிலையில், காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது என அக்கட்சியின் எம்.பி சுதிப் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து