முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

21 மாவட்டங்களில் முகாம்கள் மூலம் 1,929 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது: அமைச்சர்

செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2026      தமிழகம்
CM-2-2026-02-17

சென்னை, தமிழகத்தில் இதுவரை 21 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார்.  மருத்துவத் துறையில் அரசு செய்த சாதனைகளைப் பட்டியலிட்டுப் பேசிய அமைச்சர், தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் வகையில், புற்றுநோய் கண்டறியும் முகாம்கள் இதுவரை 21 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளன.

இவற்றில் கலந்துகொண்ட 79.17 லட்சம் நபர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டதில் 1,929 பேருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் உரிய சிகிச்சை பெற்று வருகின்றனர். புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலமாக குணப்படுத்த முடியும். கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 14 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா புற்றுநோய் மையம் 398 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படுகிறது" என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து