முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவிடம் ஏர்போர்ட்டை இழக்கும் உகாண்டா

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

பீஜிங் : சீனாவிடம் கடன் வாங்கிய பாவத்துக்கு தனது ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்தையும் இழக்கக் கூடிய தர்மசங்கடமான நிலைக்கு உகாண்டா நாடு தள்ளப்பட்டுள்ளது. 

ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள உகாண்டா, மிகவும் ஏழ்மையான நாடு. அந்நாடு சீனாவின் எக்ஸிம் பொதுத்துறை வங்கியிடம் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.1,500 கோடி கடன் வாங்கியது. கடனுக்கு 2 சதவீதம் வட்டி. 20 ஆண்டில் திருப்பி செலுத்த வேண்டும். 7 ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்பது விதிமுறை. உகாண்டாவில் உள்ள ஒரே ஒரு சர்வதேச விமான நிலையமான எண்டெபெ விமான நிலையத்தை மேம்படுத்தத்தான் உகாண்டா அரசு இந்த கடனை வாங்கி உள்ளது.

ஆனால் கடனை திருப்பி செலுத்த தவறினால், எண்டெபெ விமான நிலையம் உட்பட சில அரசு சொத்துக்கள் அடமானமாக பெறப்படும் என கடுமையான விதிமுறையை சீனா வகுத்துள்ளது. அதுமட்டுமின்றி எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாமல் விமான நிலையத்தை ஒப்படைக்க வேண்டுமெனவும் கடன் விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்த விஷயத்தில் உகாண்டா எந்த சர்வதேச நாட்டின் உதவியையும் நாட முடியாது. வேறு வழியில்லாமல் கடன் வாங்கிய உகாண்டா இந்த கடுமையான விதிகளை மாற்ற சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

தனது குழுவையும் பீஜிங் அனுப்பியது. ஆனால் சீன அதிகாரிகள் எதற்கும் மசியவில்லை. உகாண்டா குழு தோல்வியுடன் நாடு திரும்பி உள்ளது. இதன் காரணமாக சீனாவிடம் உகாண்டா வசமாக சிக்கி உள்ளது. நிச்சயமற்ற பொருளாதார சூழலில் அந்நாடு தனது ஒரே சர்வதேச விமான நிலையத்தையும் சீனாவிடம் இழக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கடன் ஒப்பந்தத்தில் தவறு செய்து விட்டதாக அந்நாட்டு நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பும் கோரி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து