முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவையில் தொடர் அமளி: காங்கிரஸை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: வெங்கையா நாயுடு நடவடிக்கை

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

மாநிலங்களவையில் தொடர் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 12 எதிர்க்கட்சி எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்து தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார். 

மாநிலங்களவையில் நேற்று வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவை கூடியதில் இருந்தே எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில்,  கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் கண்ணியக்குறைவாக நடந்து கொண்டதாக  எதிர்க்கட்சியை சேர்ந்த 12 எம்.பிக்களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து  இடை நீக்கம் செய்து மாநிலங்களவை தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சஸ்பெண்ட் செயப்பட்ட எம்.பிக்களின் விவரம்:

இளமாறம் கரீம் (சிபிஎம்),  பூலொ தேவி நேதம், ஷ்யா வெம்ரா, ஆர். போரா, ராஜமனி படேல், சையது நசிர் ஹூசைன், அகிலேஷ் பிரசாத் சிங், ( காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ). பினோய் விஸ்வம் (சிபிஐ) தோலா சென் &ஷாந்தா சேத்ரி (திரிணாமூல் காங்கிரஸ்), பிரியங்கா சதுர்வேதி &அனில் தேசாய், (சிவசேனா).

இவர்கள், பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையின் மாண்பைக் குறைக்கும் வகையில், கடும் அமளியில் ஈடுபட்டதாலும், அவை நடவடிக்கைகளை தடுத்ததாலும், 12 மாநிலங்களவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து