முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் கிராமத்தில் மது குடிப்போர் அதிகம் : ஆய்வில் புதிய தகவல்

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்திய நகர்புறங்களை காட்டிலும் கிராமப்புறங்களில் மது குடிப்போர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 

நாடு முழுவதும் புகையிலை மற்றும் மது குடிப்போர் குறித்த கணக்கெடுப்பை தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு - 5 (2019-21) என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் ஆண்களிடையே புகையிலை பயன்பாடு 38% ஆக உள்ளது. கிராமப்புற ஆண்களில் 42.7% பேர் புகையிலை போடுகின்றனர்.

நகர்புறங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் முறையே 28.8% மற்றும் 5.4% என்ற அளவில் புகையிலையை பயன்படுத்துகின்றனர். 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களில் பத்தில் ஒருவர் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். மது குடிப்பவர்களில் கிராமப்புறங்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுக்கப்பில் ஆண்களில் 19.9% பேர் மது அருந்துகிறார்கள். நகர்ப்புற ஆண்களில் 16.5% பேர் மது குடிக்கின்றனர். ஒட்டுமொத்தமாக 1.3% பெண்கள் மட்டுமே மது குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட களப்பணி ஆய்வானது கடந்த 2019 ஜூன் முதல் 2020 ஜனவரி இறுதி வரையும் முதற்கட்டமாகவும், 2020 ஜனவரி முதல் 2021 ஏப்ரல் இறுதி வரை இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட 17 மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்களில் தரவுகள் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து