முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காந்தியின் பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பார்லி. வளாகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

வியாழக்கிழமை, 18 டிசம்பர் 2025      இந்தியா
Parliament-2024-11-27

புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே பேரணியாக நடந்து சென்று காங்கிரசின் கார்கே, கேசி வேணுகோபால், பா. சிதம்பரம், தி.மு..வின் திருச்சி சிவா, கனிமொழி, மற்ற பிற கட்சிகளின் எம்.பிக்கள் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றம் செய்து புதிய விதிகளை அறிமுகம் செய்யும் புதிய மசோதா மீதான விவாதம் நேற்று முன்தினம் மக்களவையில் நடைபெற்றது. மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக விபி-ஜி ராம் ஜி என அழைக்கப்படுகிறது.

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று முன்தினம் மசோதாவைத் தாக்கல் செய்தார். திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. நேற்று முன்தினம் மக்களவையில் இந்த மசோதா குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. நேற்றும் விவாதம் நடைபெற்றது. 

இந்நிலையில் நேற்று காலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பிக்கள் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே பேரணியாக நடந்து சென்று காங்கிரசின் கார்கே, கேசி வேணுகோபால், பா. சிதம்பரம், தி.மு..வின் திருச்சி சிவா, கனிமொழி, மற்ற பிற கட்சிகளின் எம்.பிக்கள் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து