முக்கிய செய்திகள்

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: இந்திய குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

வெள்ளிக்கிழமை, 3 டிசம்பர் 2021      விளையாட்டு
Junior-World-Cup-Hockey 202

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய குழுவை சேர்ந்த ஒருவருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அரையிறுதி...

12-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி  போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, 6 முறை சாம்பியனான பலம் வாய்ந்த ஜெர்மனியை எதிர்கொண்டது. கால்இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியதுடன் தடுப்பு ஆட்டத்தில் வலுவாக இருப்பதையும் இந்தியா நிரூபித்து காட்டியது. 

சமூக ஊடக குழு... 

இந்த நிலையில்  ஒடிசா அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் இளைஞர் சேவைகள் துறையின் (DSYS) சமூக ஊடக குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று  உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஒடிசா விளையாட்டு துறை அதிகாரி ஒருவர் கூறும்போது , இந்த தொடரை கையாளும் சமூக ஊடக குழு உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி உறுதிசெய்யப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு 48 மணி நேரத்திற்கும் ஊடக மையத்தைப் பயன்படுத்தி வரும் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை (RT-PCR) நடைபெறும் ". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து