முக்கிய செய்திகள்

அம்பேத்கர் நினைவு தினம்: ஜனாதிபதி, பிரதமர் மலர்தூவி மரியாதை

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      இந்தியா
Modi 2021 12 06

சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது உருவப்படத்திற்கு தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அந்த வகையில் டெல்லியில் அம்பேத்கர் சிலைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து