முக்கிய செய்திகள்

இந்தியாவுடன் அமைதியான உறவு நீடிக்க பாக். விருப்பம்

வியாழக்கிழமை, 13 ஜனவரி 2022      உலகம்
Imran-Khan 2022 01 12

இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடன் அமைதியான உறவு நீடிக்க, பாகிஸ்தானின் புதிய பாதுகாப்பு கொள்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு கொள்கைக்கு, தேசிய பாதுகாப்பு கமிட்டியும், பாகிஸ்தான் அமைச்சரவையும் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இக்கொள்கையை, பிரதமர் இம்ரான் கான் இன்று வெளியிடுகிறார். இதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றி, பாகிஸ்தானில் வெளியாகும் எக்ஸ்பிரஸ் டிரிப்யூன் நாளிதழில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடன் அமைதியான உறவை ஏற்படுத்த வேண்டும். ஜம்மு, காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படாவிட்டாலும், இந்தியாவுடன் அமைதி, நட்புறவு நீடிக்க வேண்டும். இந்தியாவுடன் வர்த்தக உறவை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவுடனான இரு தரப்பு பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டால், அமைதி, நட்புறவு, வர்த்தக உறவு ஆகியவை ஏற்பட, அதிக வாய்ப்பு உள்ளது. எனினும், இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கும் முக்கிய பங்கு உள்ளது. நிபந்தனையற்ற பேச்சு நடத்த, இந்தியாவும் முன்வரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து