முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா பேரழிவை சந்திக்கும்: அமெரிக்க அதிபர் பகிரங்க எச்சரிக்கை

வியாழக்கிழமை, 20 ஜனவரி 2022      உலகம்
Image Unavailable

உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா பேரழிவை சந்திக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷ்யா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது. மேலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. 

இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

உக்ரைன் மீது படையெடுக்கப்பட்டால் அதற்கு முழு பொறுப்பு ரஷ்யா தான். உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா பேரழிவை சந்திக்கும். ரஷ்யாவுக்கும் அதன் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த எங்கள் கூட்டாளிகள் தயாராக உள்ளனர். 600 மில்லியன் மதிப்பிலான அதிநவீன ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளேன். உக்ரைனுக்குள் நுழைய ரஷ்ய படைகள் உண்மையான விழைவுகளையும் மிகப்பெரிய மனித உயிரிழப்புகளை விலையாக கொடுக்க நேரிடும்.  உக்ரைன் எல்லை நோக்கி ரஷ்யா மேலும் முன்னேறி செல்லும்பட்சத்தில் அதிபர் புடின் (ரஷ்யா) தான் இதுவரை கண்டிராத பொருளாதார தடைகளை பார்க்க நேரிடும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து